“கடவுளுக்குரியதை கடவுளுக்கும் சீசருக்குரியதை சீசருக்கும் கொடுங்கள்” (மத்22:15-21)என இன்றைய நற்செய்தியில் நாம் கேட்கிறோம். பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.
தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.
சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்” என்று அவர்கள் கேட்டார்கள். இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார்.
அவர்கள், “சீசருடையவை” என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
புனித யோசேப்பு தேவாலயத்தில் திருமணம் செய்வதற்கு ஒரு வெளிநாட்டு தம்பதியர் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் சொந்த காரணங்களுக்காக சிவில் பதிவுத்திருமணம் செய்து கொள்ளாமல், ஒரு தேவாலய திருமணத்தை மட்டும் செய்ய விரும்பினர். “சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?”என்ற பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களின் கேள்விகளைப் போன்றே தம்பதியினரின் விசாரணையான “சிவில் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்யாமல் ஆலயத்தில் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறதா?” என்ற கேள்வி இன்றைய நற்செய்தியை
பிரதிபலித்தது; பின்னர், நான் தம்பதியருக்கு விளக்கினேன்.
மலேசியாவில், தேசிய பதிவுத் துறை
(Jababtan Pendaftaran Negara – JPN)
1982 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி அனைத்து முஸ்லிம் அல்லாத தம்பதியினருக்கும் ACT 1976 (சட்டம் 164) இன் கீழ் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. இது ஜேபிஎன் தேவை மற்றும் கட்டளை. எந்தவொரு கத்தோலிக்க தம்பதியினரும் கத்தோலிக்க திருஅவையில் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், முதன்மையாக அவர்கள் ஆலய திருமணத்திற்கு முன்பு திருமணப் பதிவு செய்ய வேண்டும். தம்பதியினர் திருமணப் பதிவு மட்டுமே செய்திருந்தால், கத்தோலிக்க திருஅவையின் பார்வையில். அவர்கள் இன்னும் திருமணமாகவில்லை, ஆகையால், ஜே.பி.என் இல் சிவில் பதிவுத் திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் தங்களது ஆலய திருமணத்திற்கு உடல் ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இயேசு ஒருபோதும் தனது ஒருமைப்பாடு, சிவில் அதிகாரம் மற்றும் சமய நெறி ஆகியவற்றுக்கு இடையே மிகத் தெளிவான வேறுபாட்டைக் காட்டுவதில் ஒருபோதும் சமரசமாகவில்லை, மேலும் அரசாங்கத்துக்கும் கடவுளுக்குமான நம்முடைய கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றும்படி அவர் நம்மை அழைக்கிறார்.
எது கடவுளுக்கு சொந்தமானது அதைக் கடவுளுக்கு திரும்ப கொடுக்கவேண்டும் அத்துடன், அதே நேரத்தில் மனித சட்டங்களை சட்டபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கடவுளின் இறையாண்மையை வலியுறுத்துவதுடன்
இயேசு பொறியில் சிக்குவதைத் தவிர்க்கிறார்.
பொது நன்மைக்கு வழிநடத்தும்போது சமூகம் அதிகாரத்தால் நிர்வகிக்கப்பட வேண்டும். அரசாங்கத்தின் வரி செலுத்துவது என்பது சேவை விதிமுறைகளில் அரசாங்கம் செய்ததை திருப்பிச் செலுத்துவதைக் குறிக்கிறது. அரசாங்கமும் அதன் தலைவர்களும் அனைவரின் நல்வாழ்வுக்காக சட்டத்தின் படி சமூகத்தை நியாயமாக ஆட்சி செய்ய வேண்டும். சமூகம் கீழ்ப்படிந்து அரசாங்கத்தின் சட்டத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.
அதேபோல், கடவுளுடைய மக்கள் விவிலியத்தின் வழியாக வரும் உண்மைக்கு ஏற்ப கடவுளின் வழியைப் பின்பற்ற வேண்டும். நாம் மனித நோக்கத்தின் படியல்ல கடவுளின் நோக்கத்தின்படி நம் வாழ்க்கையை வாழ வேண்டும். எனவே, நாம் அரசாங்கத்திற்கு திருப்பிச் செலுத்த வேண்டியதை சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து கொடுப்பதுடன் கடவுளுக்கு நாம் செலுத்த வேண்டியதை கடவுளுக்கு செலுத்த வேண்டும். கடவுளுக்கு சொந்தமானதை கடவுளுக்குக் கொடுப்பதே உண்மையான வாழ்க்கை. நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் நாம் கடவுளுக்கு நம்மைக் கொடுக்கிறோம். நமது வாழ்வை நாம் கடவுளுக்கு கொடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். “ஆண்டவருக்கு மாட்சியையும் மாண்பையும் கொடுங்கள், அவரே அரசர் , அவர் தம் மக்களை நீதியுடன் ஆட்சி செய்கிறார்”
(தி.பா95/96).
அருட்தந்தை ஜோர்ஜ் பாக்கியசாமி
பங்குத்தந்தை
புனித யோசேப்பு ஆலயம்
செந்தூல், கோலாலம்பூர்.
மொழிபெயர்ப்பு:
சூ. யூ. யூலியன்
You must be logged in to post a comment.