இதுவே மனந்திரும்ப வேண்டிய காலம்

ஊடகச் சந்திப்பைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, பொதுமக்களின் பெருமூச்சு, புலம்பல் மற்றும் அதிருப்திகளை வெளிப்படுத்திய கருத்துகளையும் புகாரையும் படித்துக்கொண்டிருந்தேன். அவர்களில் பலர் வெறும் கோபத்தில் இருந்தனர் மற்றும் அண்மையில் நடந்த சபா தேர்தலில் தொற்றுக்கள் அதிகரித்ததற்காக தொடர்ந்து குற்றம் சாட்டினர். மக்களிடமிருந்து வந்த சில வலுவான வெளிப்பாடுகளில் ஒன்று, “இந்த தொற்றுநோய்களின் போது ஏன் ஒரு தேர்தல் முதன்முதலில் நடந்தது, அரசியல்வாதிகள் ஏன் இந்தத் தேர்தலை முன்னெடுப்பதில் சுயநலமாக இருக்கிறார்கள்.” என்பதாகும்.
இந்த இரண்டு மாதங்களை கடந்து, மலேசியா ஒற்றை மற்றும் இரட்டை இலக்கங்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. இப்போது, இரட்டை இலக்கங்களை மீறுவதைப் பார்க்கிறோம். புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இரண்டாவது வாசகத்தில், “எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள் (பிலி 4:6)” எனக் கூறியுள்ளார்.
கடவுளின் திராட்சைத் தோட்டத்தில், மக்களுக்கு “எந்த கவலையும் இல்லை.” உண்மையில் அதைச் செய்வது என்று சொல்வது எளிது. இந்த தொற்றுநோய்க் காலத்தில் உள்ள விடயங்கள் நம்மை நிச்சயமற்ற தன்மை மற்றும் அச்சத்திற்கு இட்டுச்செல்லும்போது எப்படி கவலைப்படாது அல்லது பயப்படாமல் இருப்பது. சில நேரங்களில், நாம் பீதி அடைகிறோம். ஒருவித கவலை மற்றும் பயத்திலிருந்து விடுபட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.
உலகத்தின் மிகைப்படுத்தப்பட்ட கவலையுடன் இருக்க நாம் விரும்பவில்லை. புனித பவுல் நமக்கு அறிவுறுத்துவது போல, இறுதியாக, சகோதர சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்குரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள்….
அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடிருப்பார். (பிலி 4:8-9)
முதல் வாசகத்திலும் நற்செய்தியிலும் ஒரே திராட்சைத் தோட்டமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு திராட்சைத் தோட்டத்தை வைத்திருக்கும் விவசாயி தனது நிலத்தில் முதன்மையான கொடியை வளர்க்க எதிர்பார்ப்பதுடன் சிறந்த விளைச்சலையும் எதிர்பார்க்கிறான் என்று அது விளக்குகிறது. ஆனால் அது ஒரு ஏமாற்றமாக இருந்தது. அவர் விரும்பும் திராட்சைத் தோட்டத்திற்கு அதிக பணம், உழைப்பு ஆகியவற்றை செலவு செய்தார்,
திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்; நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார்; மாறாக, காட்டு பழங்களையே அது தந்தது, என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?
என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்; “நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும்.
நம்முடைய கடவுள் என்ன வகையான கனிகளை எதிர்பார்க்கிறார்? நம்பிக்கை , ஒருவருக்கொருவர் அன்பு… ஆனால் நாம் துரோகம், வெறுப்பு மற்றும் பலவற்றை உடையவர்களாக மாறுகிறோம் (எசாயா 5: 1-7).
திராட்சைத் தோட்ட உரிமையாளர், திராட்சைத் தோட்டத் தொழிலாளரின் வழிகளை மாற்ற மூன்று முயற்சிகளை மேற்கொண்டதை நாம் காண முடிந்தது. அறுவடைக்காலம் வரும்போது உரிமையாளர் அறுவடை சேகரிக்க தனது பணியாளர்களை அனுப்புகிறார், ஆனால் அவர்கள் சிலரை நையப்புடைத்தனர், சிலரை கொலைசெய்தார்கள். முதல் மற்றும் இரண்டாவது தோல்விக்குப் பிறகு, கடைசியாக உரிமையாளர் அறுவடை சேகரிக்க தனது மகனை அனுப்பினார், அவர்கள் அவரையும் கொன்றனர் என்பதே இந்த வார நற்செய்தியில், திராட்சைத் தோட்டத் தொழிலாளர்கள் குறித்த குற்றச்சாட்டாக இருந்தது.
இங்கே, எப்போதுமே கடவுள் நமக்கு பல வாய்ப்புகளைத் தருகிறார், நம்முடைய மாற்றத்திற்காக பொறுமையாகக் காத்திருக்கிறார், கடவுள் ஒருபோதும் நம்மைத் துண்டிக்க மாட்டார் என்பதே செய்தியாக இருக்கிறது. ஆனால் கடவுள் பொறுமையை இழக்கும் ஒரு நாள் வரும், அந்த நாளில், நாம் தேர்ந்தெடுக்கும் வழிகளுக்கு நாமே பதிலளிக்க வேண்டியிருக்கும். நம்முடைய எல்லா அலட்சியங்களிலிருந்தும் நாம் மனந்திரும்பி கடவுளிடம் திரும்ப வேண்டும், நம்மிடம் ஏற்கனவே உள்ளவற்றிற்கும் நம்முடைய சுயநல வழிகளுக்கும் நன்றி சொல்லக்கூடாது. மனந்திரும்ப வேண்டிய நேரம் இப்போதே, அது கல்லறையில் அல்ல.
நம்முடைய சொந்த விருப்பத்தால் மட்டுமே ஒரே இரவில் நம்மை மாற்ற முடியாது. நமக்கு கடவுளின் உதவியும் அவருடைய அருளும் தேவை. நாம் கனிகளைக் கொண்டுவர வேண்டும் அது எல்லா மக்களும் பாராட்டத்தக்க கனிகளாக வேண்டும். நம்முடைய எல்லா கோரிக்கைகளையும் நாம் கடவுள் முன் வைக்க வேண்டும். புனித பவுல் இன்று மீண்டும் கூறுவது போல்,
நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்.
அப்பொழுது, கொவிட்-19 தொற்றுக்கெதிராகவும், நமது பிரச்சனைகளுக்கெதிராகவும் போர்புரிய ஆண்டவர் நம்முடன் நமக்கு அருகிலிருப்பதுடன் அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.
அருட்தந்தை ஜோர்ஜ் பாக்கியசாமி 4/10/2020
பங்குத்தந்தை
புனித யோசேப்பு ஆலயம்
செந்தூல், கோலாலம்பூர்.
மொழிபெயர்ப்பு:
சூ. யூ. யூலியன்
You must be logged in to post a comment.