• HOME
  • About
    • PARISH VISION & MISSION
      • VISION & MISSION 2021
      • VISION & MISSION 2018-2020
      • VISION & MISSION 2015-2017
    • History
    • Our Parish Priest
    • PARISH PRIESTS OF ST. JOSEPH SENTUL
    • Directions To The Church
  • Activities
  • BEC/Material
    • BEC
    • BEC Reflection
  • Ministries
    • Parish Organisation Chart
    • Spiritual Family Tree
    • Catechetical
      • CATECHISM
      • SUNDAY SCHOOL FB PAGE
      • RCIA
    • Communion Ministry
    • EAGLE’S WING MINISTRY
    • WOMEN MINISTRY
    • Myanmar Community
  • BULLETIN / MASS INTENTIONS
    • Mass Schedule & Bulletin
    • MYANMAR MASS SCHEDULE
    • புல்லட்டின்
    • Mass Intentions
  • Tamil
  • SJC Youth
    • Activities
    • Instagram
  • DONATIONS
  • OUR PATRON SAINT
    • St. Joseph The Worker
    • YEAR OF ST. JOSEPH 2021
  • SJC Planner 2026

December 6, 2024

ஆர்.சி.ஐ.ஏ வேட்பாளர்களுக்கான திருவருகைக் கால தியானம்

கடந்த சனிக்கிழமை 23 நவம்பர் 2024 அன்று, எங்கள் திருஅவையில் 2024/2025 தவணைக்கான அனைத்து ஆர். சி. ஐ. ஏ வேட்பாளர்களுக்கும் நினைவுகூரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் சுமார் 15 வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். அந்நாள் தொடக்க பிராத்தனையுடன் தொடங்கியது, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இசையின் மூலம் கடவுளைப் புகழ்ந்து பாடினர்.

முதல் அமர்வானது “காணாமல் போனது மற்றும் கண்டு பிடித்தல்” (Lost and Found) என்று அழைக்கப்பட்டது. நம் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள், துயரங்கள் இருந்தாலும் அவற்றை எதிர்நோக்க கடவுள் என்றும் நம் கைகளைப் பிடித்துக் கொண்டு வழிகாட்டுவார் என்பதை அந்நடவடிக்கை வலியுறுத்தியது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, இயேசுவின் பிறப்பில் முக்கிய பங்கு வகிக்கும் மூன்று ஞானிகள் கதையை ஆய்வாளர் வேட்பாளர்களிடம் எடுத்துரைத்தார், அக்கதையின் வழி
கற்றுக்கொண்ட முக்கிய பாடங்கள்:

1. தேடுதல் மற்றும் நிலைத்திருத்தம்:மூன்று ஞானிகள் விண்மீனைப் (நட்சத்திர ஒளியை) பின்பற்றி, கடினமான சவால்களை எதிர்கொண்டு தொடர்ந்து தேடினர். இது மத்தேயு 7:7 (“தேடுங்கள், கண்டைவீர்கள்”) என்ற வசனத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

2. நம்பிக்கையும் விசுவாசமும்:
இறைவன் வழிகாட்டுதலின் மீது முழு நம்பிக்கையுடன் அவர்கள் பயணத்தை தொடர்ந்தனர். நம்பிக்கையும் தைரியமும் வாழ்க்கையில் முக்கியமானவையாகும்.

3. அளவில்லா அர்ப்பணிப்பு:
அவர்கள் இயேசுவை கண்டடைந்த பின், தங்கள் மிகச் சிறந்த தகுதியாகும் பொன்னும், வெள்ளை ப்போளமும், சாம்பிராணி ஆகியவற்றை அர்ப்பணித்தனர். இந்த செயலின் மூலம் நமக்குப் பிரமாணம் நமது செல்வமும் காலமும் தேவனைச் சார்ந்ததாக கருதுவது.

4. முன்னோக்கிய பார்வை:
தடைகளையும் சவால்களையும் தாண்டி, இறுதிக் குறிக்கோளான வெளிச்சத்தை அடைவதே வாழ்க்கையின் அடிப்படையாகும்.

இந்தக் கதை, நம்மை வாழ்வில் கடினமான சோதனைகளை கடந்தும் நம்பிக்கையுடன் பயணிக்கத் தூண்டும் ஒரு மாபெரும் பாடமாக இருந்தது. மேலும் அவர்கள் வந்த வழியில் திரும்பாமல் புதிய வழியில் சென்றார்கள்.
முதியோர் புகு முக (RCIA) பயணத்தில் பழைய வாழ்க்கைக்கு திரும்பாமல் இறைவன் கொடுத்த புதிய விசுவாச வாழ்க்கையில் நம்பிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மிகவும் அழகான முறையில் நாடகமாக நடித்தனர். அந்நாடகத்தில் அனைத்து ஆர். சி. ஐ. ஏ வேட்பாளர்களும் ஆய்வாளர்களும் சிறப்பாக பங்கேற்றனர்.

அந்நாடகத்தில் இயேசுவின் பிறப்பை
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கேற்ப
(அன்னை மரியா, யோசேப்பு, வானதூதர், இடையர்கள் , மூன்று ஞானிகள் , விடுதியின் உரிமையாளர், காவல்காரன், ஏரோது அரசன், ) உணர்வுபூர்வமாக நாடக வடிவில் நிகழ்த்தி, நேரலை நிகழ்வாகக் கொண்டுவந்தார்கள்.
இந்த நிகச்சியில் புதிய அனுபவத்தை உணர்ந்து மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். அதுமட்டுமல்லாமல் கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தையும் ஆழமாக புரிந்து கொண்டனர். மேலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையை உயிர்ப்பிக்கவும், அன்பையும் நம்பிக்கையையும் பகிர்ந்து கொள்ளவும் உதவியது.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, ‘வாருங்கள் பின்பற்றுங்கள்’ (Come and Follow) மற்றும் ‘புதிய அடையாளம்’ (New Identity) என்ற இரண்டு தலைப்புகளுடன் அன்றைய நாளின் அடுத்த அமர்வு தொடர்ந்தது. நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதை அப்பகுதி வேட்பாளர்களுக்கு நினைவூட்டியது, நாம் பிறப்பதற்கு முன்பே அவரால் அவரது மகன்களாகவும் மகள்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். எனவே, கடவுளின் பிள்ளைகளாக நமது உண்மையான அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் நமது தற்போதைய அடையாளத்தை மாற்ற நாம் அழைக்கப்படுகிறோம். உண்மையான கத்தோலிக்க அடையாளமானது ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை முன்னோக்கி வாழ வேண்டும் என்பதை அப்பகுதியின் வழி அனைத்து வேட்பாளர்களும் உணர்ந்தனர்.

அதைத் தொடர்ந்து, நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் ஏற்றுக்கொள்ளும் சடங்கிற்கான ஒத்திகை இருந்தது. ஒத்திகைக்குப் பிறகு மாலை தேநீருடன் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இறுதியாக நிறைவு பிராத்தனை நடந்தது, அனைவரும் விடைப்பெற்றனர்.

ஆக்கம் : தர்ஷினி மரியாள் ஸ்கோவலென் – வேட்பாளர் 2024-2025

மொழிபெயர்ப்பு : திரேசி பிரிஷா அ விக்டர் வேட்பாளர் 2024-2025


புகைப்படங்கள்

Like this:

Like Loading…

Tagged with: News

« RITE OF ACCEPTANCE 2024/2025
திருவருக்காலத்தை முன்னிட்டு செந்தூல் புனித யோசேப்பு ஆலயத்தில் தியானம். »

PARISH ADDRESS

Gereja Katolik St. Joseph
Jalan Sentul,
51000 Kuala Lumpur
Malaysia

Map

CONTACT US

Tel: 03-40415304
Email: stjoseph@archkl.org
Website: http://www.stjosephsentul.org
Facebook: www.facebook.com/stjosephsentul

PARISH OFFICE WORKING HOURS

Monday: Closed
Tuesday - Friday: 9:00am - 5:00pm
Lunch Hour: 1:00pm - 2:00pm
Saturday: 9.00am - 1.00pm
Sunday: 8.30am - 12.00 noon

© Copyright · Church of St. Joseph · Hosted on SiteGround · Developed by Zomi Daily

%d