புனித யோசேப்பு ஆலயத்தின் மேய்ப்புப்பணிக் கூட்டம் கடந்த அக்டோபர் முதலாம் திகதி மாலை 2.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பங்கின் பணிக்குழுத் தலைவர்கள் உட்பட பங்குமக்கள் பலரும் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலில் பங்கு மேய்ப்புப்பணிக்குழுவினரால் ஒன்றித்த திரு அவையாக பயணிப்பதன் நோக்கம் அதில் உள்ளடக்கப்படும் செயற்பாடுகள் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டதுடன். பங்கு மேய்ப்புப்பணிக் குழுத் தலைவர் திரு கபிரியேல் மோசஸ் அவர்களின் உரையும் தொடர்ந்து கோலாலம்பூர் மறைமாவட்டத்திலிருந்து வருகை தந்திருந்த குமாரி றீத்தா கிருஷ்ணன் அவர்களின் விளக்கமளிப்பும் நடைபெற்றது. பின்னர் எம்மாவுஸ் நற்செய்தியும் விளக்கமும் பங்குத் தந்தை அருள்பணி ப்ரெட்ரிக் யோசேப்பு அவர்களால் வழங்கப்பட்டது. தொடர்ந்து குழுப்பகிர்வு நடைபெற்றது இதில் பங்கெடுத்த 12 குழுக்களும் சமூகம், தொடர்பாடல், தலைமைத்துவம் மற்றும் பயிற்சி என்ற தலைப்புகளை உள்ளடக்கி கருத்துப்பகிர்வுகளை மேற்கொண்டிருந்தனர். தொடர்ந்து வணக்கத்திற்குரிய பேராயர் ஜூலியன் லியாவ் அவர்களின் உரை நடைபெற்றது. இதன் போது குழுப்பகிர்வில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் தொடர்பான விளக்கத்தையும் வரவேற்பையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கலந்துரையாடலின் பேரருட் தந்தை ஜேம்ஸ் ஞானப்பிரகாசம், அருள் தந்தை மிச்சல் அந்தோனி மற்றும் அருள் தந்தை ஜூஜின் பெனடிக்ட் ஆகியோரும் பங்குகெடுத்திருந்தார்கள். பின்னர் பங்குக்குருவானவரின் செபத்துடன் கூட்டம் இனிதே நிறைவெய்தியது.
செபமாலைப் பவனி
கடந்த 3 ஆண்டுகளாக தொற்றுநோயின் தாக்கத்தால் அதிச மட்டத்திலும் பங்கு மட்டத்திலும் செபமாலை செபத் தியானங்கள் பவனிகள் நடைபெறாமலே இருந்தது. இந்த ஆண்டு அன்னையின் பரிந்துரையாலும் ஆண்டவரின் ஆசீராலும் நமது வழிபாடுகளை தடையின்றி தொடர ஆரம்பித்ததன் தொடர்ச்சியாக, சிறப்பாக அக்டோபர் மாதம் அன்னை மரியாவிற்கான செபமாலை மாதமாக இருப்பதால் அக்டோபர் 1 மாலை 5.30 மணிக்கு நவநாளும் 6.00 மணிக்கு திருப்பலியும் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்துப் பணிக்குழுக்களின் அங்கத்தவர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் ஆகியோர் ஒன்றிணைந்து அன்னை மரியாவின் திருசுரூபத்தை தாங்கி மெழுகுவர்த்திகளை ஏந்தியவர்களாக பவனி மேற்கொண்டார்கள். இது திருச்செபமாலைப் பவனியாகவே அமைந்திருந்ததுடன் பல நூற்றுக்கணக்கான பங்கு மக்கள் பங்கேற்று சிறப்பான முறையில் செபமாலை மாதத்தை தொடக்கி வைத்திருந்தமை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
ஜூலியன் ராஜ் எழுதியது
You must be logged in to post a comment.