புனித யோசேப்பு ஆண்டை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கும் புனிதயோசேப்பைநோக்கிசெபம்
புனித யோசேப்பிடம் செபம்
கன்னியர்களின் பாதுகாவலரும் தந்தையுமான புனித யோசேப்பே, பரிசுத்தராகிய இயேசுக்கிறிஸ்துவும் கன்னியர்களில் உத்தம கன்னியாகிய மரியாளும் உமது நம்பிக்கைக்குரிய பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் இந்த அரும் பேற்றுக்குரியவரான நீர், என்னை எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் விடுவித்து, நான் களங்கமற்ற உள்ளத்துடனும் தூய இதயத்துடனும் கற்பொழுக்கமுள்ள உடலுடனும் என்றென்றும் இயேசு கிறிஸ்துவுக்கும், கன்னி மரியாளுக்கும் என் வாழ்நாளெல்லாம் சேவையாற்றச் செய்தருளும்படி உம்மை இரஞ்சி மன்றாடுகிறேன்
அர்ச்சிக்கப்பட்டவரான புனித யோசேப்பே, நீர் மிக்க மகிழ்ச்சிக்குரியவர். அரசர்கள் பலர், பார்க்கவும் கேட்கவும் விரும்பியும் அவர்களால் பார்க்கவும் கேட்கவும் இயலாமற் போன இறைவனை, நீர் பார்க்கவும் கேட்கவும் பேறுபெற்றதோடல்லாமல், அவரைக் கைகளில் ஏந்தி, அரவணைத்துப் பாராட்டி, சீராட்டி, உடையுடுத்தி பாதுகாக்கவும் பேறு பெற்றீர்.
மு: புனித யோசேப்பே, எங்களுக்காக வேண்டுக்கொள்ளும்.
ப: கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாவோமாக.
புனித யோசேப்பை நோக்கி செபம்
ஓ கன்னி மரியாவின் மிகத்தூய்மையான துணைவரே, உமது உதவியை வேண்டி, உமது பரிந்துரையை நாடிவந்த எவரும், உம்மால் கைவிடப்பட்டதாக ஒரு போதும் சொல்லக் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும்.
உமது வல்லமையில் மிகுந்த நம்பிக்கை கொண்டு உமது பாதுகாப்பை வேண்டி, இறைஞ்சி மன்றாடுகிறேன். ஓ மீட்பரின் பாதுகாவலரானவரே, என் தாழ்மையான மன்றாட்டைப் புறக்கணியாமல் தயவாய்க் கேட்டு அருள் புரிந்தருளும்.
புனித யோசேப்பு மன்றாட்டுமாலை
ஆண்டவரே இரக்கமாயிரும் | ஆண்டவரே இரக்கமாயிரும் |
கிறிஸ்துவே இரக்கமாயிரும் | கிறிஸ்துவே இரக்கமாயிரும் |
ஆண்டவரே இரக்கமாயிரும் | ஆண்டவரே இரக்கமாயிரும் |
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் | கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாய்க் கேட்டருளும் |
விண்ணகத்திலிருக்கிற தந்தையாகிய இறைவா | எங்கள்மேல் இரக்கமாயிரும் |
உலகத்தை மீட்ட சுதனாகிய இறைவா | எங்கள்மேல் இரக்கமாயிரும் |
தூய ஆவியாகிய இறைவா | எங்கள்மேல் இரக்கமாயிரும் |
தூய திருத்துவமாயிருக்கிற ஒரே இறைவா | எங்கள்மேல் இரக்கமாயிரும் |
புனித மரியே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
புனித யோசேப்பே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்; |
தாவீது அரசரின் புகழ்மிக்க புத்திரரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
முதுபெரும் தந்தையரின் ஒளியானவரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
இறையன்னையின் துணைவரானவரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
மீட்பரின் பாதுகாவலரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
கன்னிமரியாவின் தூய காவலரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
இறைமகனை வளர்த்த தந்தையாரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
கிறிஸ்துவை அக்கறையுடன் பாதுகாத்தவரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
கிறிஸ்துவின் பணியாளரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
மீட்பின் தலைவரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
திருக்குடும்பத்தின் தலைவரானவரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்; |
உத்தம நீதிமானான புனித யோசேப்பே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
உத்தம கற்புள்ள புனித யோசேப்பே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
உத்தம கற்புள்ள புனித யோசேப்பே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
உத்தம விவேகமுடையவரான புனித யோசேப்பே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
உத்தம வலிமைமிக்க புனித யோசேப்பே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
உத்தம கீழ்ப்படிதலுள்ளவரான புனித யோசேப்பே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
உத்தம பிரமாணிக்கமுள்ளவரான புனித யோசேப்பே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
பொறுமையின் கண்ணாடியே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
ஏழ்மையின் அன்பரானவரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
தொழிலாளர்களுக்கு மாதிரிகையே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
இல்லற வாழ்க்கையின் மகிமையானவரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
கன்னியர்களின் காவலரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
குடும்பங்களின் தூணானவரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும |
பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
துன்பப்படுகிறவர்களின் ஆறுதலே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
நோயாளிகளின் நம்பிக்கையே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
நாடுகடத்தப்பட்டவர்களின் பாதுகாவலரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
நாடுகடத்தப்பட்டவர்களின் பாதுகாவலரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாவலரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
ஏழைகளின் பாதுகாவலரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
இறக்கிறவர்களின் பாதுகாவலரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
பசாசுகளை நடுங்கச் செய்கின்றவரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
புனித திரு அவையின் பாதுகாவலரே | எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் |
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே | |
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும் ஆண்டவரே | |
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே | |
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரே | |
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே | |
எங்கள் மேல் இரக்கமாயிரும் ஆண்டவரே | |
ஆண்டவர் அவரைத் தம் வீட்டின் தலைவராக ஏற்படுத்தினார் | |
தம்முடைய உடைமைக்கெல்லாம் அதிகாரியாகவும்; ஏற்படுத்தினார். |
செபிப்போமாக,
எல்லாம் வல்ல இறைவா, சொல்லற்கரிய உமது பேரருளினால், நீதிமானாகிய புனித யோசேப்பை உம் திருமகனின் தூய அன்னைக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்கத் திருவுளமானீர், இவ்வுலகில் நாங்கள், அருட்காவலராகப் போற்றிப் புகழ்ந்து மகிழும் புனித யோசேப்பு, விண்ணுலகிலும் எங்களுக்காகப் பரிந்து பேச நாங்கள் தகுதி பெற வரமருளும். என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவருமான இறைவா, உம்மை இறைஞ்சி மன்றாடுகிறோம். ஆமென்.
இறைவனின் முன்னிலையில் மிகுந்த வலிமையுள்ளவரும், விரைந்து செயல்படும் அருட்காவலருமான புனித யோசேப்பே, எனது எல்லா வேண்டுதல்களையும், விருப்பங்களையும் உம் முன் வைக்கிறேன். ஓ புனித யோசேப்பே, உமது வலிமை மிக்க பரிந்துரையினால் உமது தெய்வீக மகனின் ஆன்மீக ஆசீர்வாதங்களை எனக்குப் பெற்றுத் தர உதவியருளும். உமது பரிந்துரையால் நான் பெறும் நன்மைகளுக்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு என்றென்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.
புனித யோசேப்பே எனது மன்றாட்டுக்கு செவிசாய்த்து என் விண்ணப்பங்களைப் பெற்றுத்தாரும். புனித யோசேப்பே, எனக்காக வேண்டிக்கொள்ளும்.
(விண்ணப்பங்கள்)………………………………………………………………………………………..
உலகைப் படைத்து ஆள்பவரான எங்கள் தந்தையே, மனித குலத்தின் மீது உழைப்பின் நியதியை ஏற்படுத்தினீர், புனித யோசேப்பின் முன்மாதிரியாலும், பாதுகாப்பினாலும் நீர் எமக்கு ஆணையிட்ட பணிகளை நிறைவேற்றி, நீர் எமக்கு வாக்களித்த கொடைகளைப் பெற உம்மை இறைஞ்சி மன்றாடுகிறோம். எல்லாக் காலங்களிலும் நீர் எமக்களித்துள்ள கொடைகளை மேம்படுத்தவும், பிறர் நலனுகாகப் பயன்படுத்தவும் அழைப்பு விடுக்கின்றீர். புனித யோசேப்பை வழிகாட்டியாகக் கொண்டு நீர் பணித்த பணிகளைச் செய்து, நீர் வாக்களித்த பலன்களைப் பெற உதவியருளும். இவை யாவற்றையும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மைப் பார்த்து மன்றாடுகிறோம்.
புனித யோசேப்பிடம் வேண்டல்
ஓ புனித யோசேப்பே, உமது தூய துணைவியாகிய மரியாவின் உதவியை வேண்டிய பின்னர், எங்களது துன்ப நெருக்கடியில் உமது ஆதரவையும் நாங்கள் நம்பிக்கையுடன் வேண்டுகிறோம்.
கடவுளின் மாசற்ற கன்னித்தாயாருடன் தொண்டினால் ஒன்றிணைக்கப் பெற்றதோடு, குழந்தை இயேசுவை தந்தைக்குரிய அன்புடன் தழுவிக்கொண்டதன் வழியாக, இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பெற்று உரிமையாக்கப்பெற்றிருக்கும் எங்களது அவசர தேவைகளில், உமது வல்லமையாலும் வலிமையாலும் எங்களுக்கு உதவிடுமாறு தாழ்மையுடன் இறைஞ்சி மன்றாடுகிறோம்.
திருக்குடும்பத்தின் மிகவும் உன்னதமான பாதுகாவலரே, இயேசுவால் தேர்ந்து கொள்ளப்பெற்ற பிள்ளைகளைப் பாதுகாத்தருளும்.
ஓ மிகவும் அன்பான தந்தையே! எங்களைத் தொற்றியிருக்கும் குறைபாடுகளையும் ஊழல் சூழல்களையும் நீக்கியருளும்.
ஓ எங்களின் மிகவும் வலிமையான காவலரே! இருளின் அதிகாரத்துடன் போராடும் எங்களுக்கு நீர் விண்ணிலிருந்து உதவியருளும்.
ஒருமுறை குழந்தை இயேசுவை பேராபத்திலிருந்து மீட்டது போல, கடவுளின் புனித திருஅவையை அதன் எதிரியின் வலைகளிலிருந்தும் எல்லா துன்பங்களிலிருந்தும் பாதுகாத்தருளும்.
உமது நிலையான பாதுகாப்பால் எங்கள் ஒவ்வொருவருக்கும் நீர் கேடயமாக இருப்பதோடு, உமது முன்மாதிரியாலும் ஆதரவாலும் நாங்கள் பக்தியோடு வாழ்ந்து, தூய நிலையில் மரித்து, விண்ணகத்தில் நிலையான மகிழ்ச்சியை பெற்றுக்கொள்வோமாக.
ஆமென்.
*நோயாளிகளுக்காக புனித யோசேப்பிடம் செபம்*
கருணையும், அன்பும் கொண்ட எங்கள் அன்பின் பாதுகாவலரே! புனித யோசேப்பு தந்தையே! உலகில் கொடிய நோய்களாலும், பேய்களின் மாயைகளாலும் மனதில் அமைதி இழந்து உடலிலும், உள்ளத்திலும் துன்பங்களைச் சுமந்து சோர்வுற்று நலியும் உம் மக்களுக்கு ஆன்மா ஆன்ம ஆறுதலும், அருளும் உதவியும் தந்து அருகிலிருந்து பாதுகாப் பாதுகாப்பீராக.
எங்கள் பாவங்களாலும், எங்கள் உற்றார் உறவினரின் சாபங்களாலும் தாங்க முடியாத கொடிய நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகி கண் உறக்கமின்றி, உணவு உண்ண விருப்பமுமின்றி சுற்றி வாழும் சொந்தங்களுக்குச் சுமைகளாக வாழ்ந்து வருகிறோம். எங்களது வேதனையும், வருத்தமும் நீக்கி எங்களுக்கு நல்வாழ்வை அருள்வீராக.
அக்னி நாவுகள் போல் எம்மை வாட்டி வதை செய்யும் வேதனை சோதனைகளிலிருந்தும் துன்ப துயரங்களிலிருந்தும் எங்களைக் காப்பாற்றி ஆரோக்கியமான வாழ்வையும், இறை வழியில் நடக்கும் நல் மனதையும் தந்தருள்வீராக.
தாழ்ச்சியாலும், பொறுமையாலும் உயர்ந்த உன்னத தந்தை யோசேப்பே ! எங்கள் உள்ளங்களிலும் தாழ்ச்சியையும், பொறுமையையும் நிரப்பியருளும். நாங்கள் வல்லமை மிக்க உமது அருள் காவலைப் பெற்றுக் கொண்டால் எவ்வித பிணியிலும், கேட்டிலும் விழாதவாறு உமது அருள் கரத்தால் தாங்குவீர் என்பதை நாங்கள் அறிவோம்.
அன்பு தந்தையே! கொடிய நோய்களால் தாக்கப்பட்டு வேதனையில் துன்புறும் தருணங்களில் எங்களுக்கு துணையாக வந்து இறை சமாதானத்தையும், ஆறுதலையும் அருள்வீராக. இறைவனுக்குத் திருவுளமானால் நாங்கள் எங்களை வதைத்து துன்புறுத்தும் நோய் நீங்கப்பெற்று நலம் பெறவும், இறை அன்பிலும், சமாதானத்திலும் நிலைத்திருந்து இறைவனுக்கு ஏற்ற வாழ்வு வாழ்ந்து உமக்கும், உம் அன்பு திருமகனாகிய இறைவனுக்கும் உன்னத சாட்சிகளாக வாழ்வதற்கும் வழிகாட்டும்.
இவ்வுலகில் நாங்கள் வாழ்ந்து இறை சமாதானத்தில் நாங்கள் இளைப்பாறும் வரை எவ்வித நோய் தாக்குதல்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாகாதபடி உமது பரிசுத்த இதயத்தில் எங்கள்ப் போற்றி பாதுகாப்பீராக.
நன்மைத்தனத்தின் ஊற்றாகிய இறைவன் உமது பரிந்துரையை எப்போதும் ஏற்பவராக இருக்கிறபடியால், இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து அடைந்து தந்தருளும்படி உம்மை மன்றாடுகிறேன். ஆமென்
You must be logged in to post a comment.