ஓ புனித யோசேப்பே, உமது தூய துணைவியாகிய மரியாவின் உதவியை வேண்டிய பின்னர், எங்களது துன்ப நெருக்கடியில் உமது ஆதரவையும் நாங்கள் நம்பிக்கையுடன் வேண்டுகிறோம்.
கடவுளின் மாசற்ற கன்னித்தாயாருடன் தொண்டினால் ஒன்றிணைக்கப் பெற்றதோடு, குழந்தை இயேசுவை தந்தைக்குரிய அன்புடன் தழுவிக்கொண்டதன் வழியாக, இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பெற்று உரிமையாக்கப்பெற்றிருக்கும் எங்களது அவசர தேவைகளில், உமது வல்லமையாலும் வலிமையாலும் எங்களுக்கு உதவிடுமாறு தாழ்மையுடன் இறைஞ்சி மன்றாடுகிறோம்.
திருக்குடும்பத்தின் மிகவும் உன்னதமான பாதுகாவலரே, இயேசுவால் தேர்ந்து கொள்ளப்பெற்ற பிள்ளைகளைப் பாதுகாத்தருளும்.
ஓ மிகவும் அன்பான தந்தையே! எங்களைத் தொற்றியிருக்கும் குறைபாடுகளையும் ஊழல் சூழல்களையும் நீக்கியருளும்.
ஓ எங்களின் மிகவும் வலிமையான காவலரே! இருளின் அதிகாரத்துடன் போராடும் எங்களுக்கு நீர் விண்ணிலிருந்து உதவியருளும்.
ஒருமுறை குழந்தை இயேசுவை பேராபத்திலிருந்து மீட்டது போல, கடவுளின் புனித திருஅவையை அதன் எதிரியின் வலைகளிலிருந்தும் எல்லா துன்பங்களிலிருந்தும் பாதுகாத்தருளும்.
உமது நிலையான பாதுகாப்பால் எங்கள் ஒவ்வொருவருக்கும் நீர் கேடயமாக இருப்பதோடு, உமது முன்மாதிரியாலும் ஆதரவாலும் நாங்கள் பக்தியோடு வாழ்ந்து, தூய நிலையில் மரித்து, விண்ணகத்தில் நிலையான மகிழ்ச்சியை பெற்றுக்கொள்வோமாக.
ஆமென்.