“திருஅவையை மீண்டும் கட்டியெழுப்புதல்” என்ற இவ்வாண்டு கருப்பொருளுக்கு அமைவாக இந்த ஆண்டு பொங்கல் கொண்டாட்டம் புனித யோசேப்பு ஆலயத்தில் கடந்த 14.01.2024 அன்று கடவுள் வழங்கிய நல்விளைச்சலுக்கு உழவர்கள் நன்றி செலுத்தும் தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
புனித யோசேப்பு ஆலயத்தின் தமிழ் அப்போஸ்தலர் பணிக்குழுவினருக்கு பங்குத்தந்தை அருள்பணி ப்ரெட்ரிக் யோசேப்பு அவர்கள் வழங்கிய ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக கொண்டாட்டத்திற்கான திட்டமிடல் 2023 டிசம்பர் நடுப்பகுதியில் ஆரம்பமாகியிருந்தது. இந்தக் குழு தமிழ் அப்போஸ்தலர் பணிக்குவின் உதவி இணைப்பாளரான ஆளுமையும் வேகமும் கொண்ட திரு எசேக்கியேல் லூயிஸ் அவர்களும் அதே போன்ற வேகமும் ஆளுமையும் கொண்ட திரு ஜேசு எட்வெர்ட் அவர்களின் உதவியுடனும் அனைத்து நிகழ்வுகளும் திட்டமிட்டப்பட்டது.
கொண்டாட்டத்தின் முதல் நாள் இரவு முழுவதும் இளைஞர்கள் வாழைமரம், கரும்பு ஆகியவற்றையும் ஏனைய அலங்காரங்களையும் செய்து முடிப்பதற்காக அவர்கள் அதிகாலை 4 மணி வரை ஆலயத்தில் தங்கியிருந்து வேலைசெய்தனர். அத்துடன் மண்டப முற்றம் பலவேறு நிறங்களைக் கொண்ட கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட அதே வேளை ஆலயத்தின் நுழைவாயிலில் பல வண்ணங்களைக் கொண்ட கோலம்
பெண்பிள்ளைகளால் அமைக்கப்பட்டது.
பண்பாட்டு விளையாட்டுகளான பானைகளுக்கு வர்ணம் தீட்டுதல், பூமாலை கட்டுதல், கரும்பு சாப்பிடுதல் மற்றும் உறி அடித்தல் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
சகோதரி வேளாங்கண்ணி மற்றும் அவரது குழுவினரின் வழிகாட்டலில் 20 குடும்பங்களால் பொங்கல் தயாரிக்கப்பட்டது. அருள்தந்தை ப்ரெட்ரிக் யோசேப்பு அவர்களின் செபத்துடன் ஒவ்வொரு பானையிலும் பால் ஊற்றி பொங்கல் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்லாமல், ஆலயத்தில் ஆங்கில மொழி பேசும் மக்கள், இலங்கை மக்கள், அதே
போன்று மியன்மார் மக்களும் இணைந்து செயலாற்றியிருந்தனர். இந்த நிகழ்வு வழியாக பொங்கலின் சிறப்பு, பண்பாட்டு மதிப்பீடுகள் மற்றும் கெளரவித்தல் ஆகியவற்றை எல்லா சமூகங்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருந்தது. பொங்கல் சமைத்தவர்களில் பலருக்கு இதுவே முதற்தடவையாக இருந்ததால் அவர்கள் பெரு மகிழ்ச்சியடைந்ததுடன் பங்கெடுத்தவர்கள் குழுவினரைப் பாராட்டியுமிருந்தார்கள். இருபது பொங்கல் பானைகளிலிருந்து ஒரு பொங்கல் பானை நன்றியறிதல் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் மிகுதி பங்குமக்களுக்கு வழங்கப்பட்டது.
பண்பாட்டு விளையாட்டுகளும், பொங்கல் சமையலும் மாலை 3 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நிகழ்ச்சி முழுவதும்
“நாதஸ்வரம்” என்ற பாரம்பரிய இசை இசைக்கப்பட்டது. மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை சொல்லப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருப்பலி ஆரம்பமாகியது. முற்றத்திலிருந்து ஆரம்பமான ஊர்வலம், அருட்தந்தை ஜார்ஜ் ஹாரிசன் அவர்கள் அருட்தந்தை ப்ரெட்ரிக் யோசேப்பு அவர்களுடன் இணைந்து பொங்கல் பானையை ஆலயத்திற்குள் கொண்டுவந்தார். திருப்பலிக்கு முன்பாக இரு அருள்பணியாளர்களும் பொன்னாடை போர்த்தப்பட்டு, “நாதஸ்வரத்துடன்” ஊர்வலமாக பலிபீடம் வரை ஆலயத்திற்குள் நுழைந்தனர். பலிபீடத்தில் அருள்பணியாளர்களை முதலில் 3 பெண்கள் ஆரத்தி
வைத்து வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, அருட்தந்தை ஜார்ஜ் ஹாரிசன், பங்குமக்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றார். வழிபாட்டின் உச்சக்கட்டமாக கடவுளை மகிமைப்படுத்தி மறைபோதக மாணவர்கள் “மலர், தூபம் மற்றும் தீபம் ஆராதனை” அளித்தனர்.
அருட்தந்தை ஜார்ஜ் ஹாரிசன் தனது சொற்பொழிவில், பொங்கல் திருநாளானது முதல் அறுவடையை கடவுளுக்கு நன்றியாக கொடுக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது என்று கூறினார். பழைய ஏற்பாட்டில் முதற்கனியை தமக்கு செலுத்தும்படி கடவுள் கூறியிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். அதை நினைவுகூரும் வகையில் இன்று பொங்கலை இறைவனுக்கு நன்றியாக செலுத்துகிறோம். கடவுளின் குழந்தைகளாகிய நாம் “வயலில் இறங்கி” நம் நம்பிக்கையை வாழவும் கடவுளுக்கு நன்றி செலுத்தவும் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
திருப்பலியின் முடிவில், அருள்தந்தை ப்ரெட்ரிக், அவர்கள் முன்னாள் மலேசியப் பிரதமர் இந்தியாவுக்குச் சென்றபோது மலேசியா மற்ற கலாச்சாரக் கொண்டாட்டங்களைக் கொண்டாடக் கூடாத நாடு என்று குறிப்பிட்டார். ஆனால், அந்தக் கருத்தைப் பொருட்படுத்தாமல், மலேசியர்களாகிய நாமும், தமிழர்களாகிய நாமும் பொங்கல் பண்டிகையை எந்தவித வேறுபாடும் இன்றி, ஒரே மனதோடு, ஒற்றுமையைக் காட்டுவதற்காகக் கொண்டாடினோம். என்றும் குறிப்பிட்டிருந்தார்.
திருப்பலிக்குப் பிறகு, சுமார் 400-450
பங்கு மக்களுக்கு 12 வகையான சைவ உணவுகள், பொங்கல், பாயசம் மற்றும் பானங்கள் அடங்கிய சிறப்பான வாழை இலையில் இரவு உணவு வழங்கப்பட்டது. சமையலுக்கு சகோதரர் மைக்கேல் மற்றும் அவரது குழுவினர் தலைமை தாங்கினர். சுவையான விருந்துக்கு குழுவினருக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றோம்.
அனைவரும் கலந்து கொண்ட மகிழ்ச்சியான நிகழ்வாக இது அமைந்திருந்தது. எல்லாப் புகழும், போற்றுதலும் இறைவனுக்கே!
குளோரியா மேரி
தமிழ் அப்போஸ்தலேட்
ஜூலியன் ராஜ் மொழிபெயர்த்துள்ளார்
You must be logged in to post a comment.